Home One Line P2 அஸ்ட்ரோ : உள்ளூர் – வெளியூர் திரைப்படங்களை அஸ்ட்ரோ கோ செயலியில் கண்டு மகிழுங்கள்

அஸ்ட்ரோ : உள்ளூர் – வெளியூர் திரைப்படங்களை அஸ்ட்ரோ கோ செயலியில் கண்டு மகிழுங்கள்

892
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எப்போது, என்னென்ன நிகழ்ச்சிகள் தேவை, மற்றும் எங்கே தேவை ஆகியவற்றின் அடிப்படையில், பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கும் வசதியை அஸ்ட்ரோ கோ ஏற்படுத்திக் கொடுக்கின்றது. அஸ்ட்ரோ கோ கையடக்க செயலி கொண்டு அஸ்ட்ரோ தமிழ் மற்றும் இந்தி அலைவரிசைகளில் ஒளியேறிய தொடர் நாடகங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் எனப் பல தரப்பட்ட நிகழ்ச்சிகளைப் பதிவிறக்கம் செய்து கண்டு களிக்கலாம்.

திரைப்படங்கள்

நம் உள்ளூர் மற்றும் வெளியூர் திரைப்படங்களான தோட்டம், வெடிகுண்டு பசங்க, அச்சர் தவீர், நீயும் நானும், மயங்காதே, அதே கண்கள், அரிமா நம்பி, அருவி, வேட்டை, சிங்கம் 3, சாமி 2, வந்தா ராஜாவாதான் வருவேன், கொடி, காற்றின் மொழி, தேவ், பக்ரி, நட்பே துணை, காஞ்சனா 3, மான்ஸ்டர், தானா சேர்ந்த கூட்டம், மாரி 2, சார்லி சாப்ளினின் 2, சர்வம் தாளமயம், ஆண் தேவதை, கடிகார மனிதர்கள், மோகினி ஆகிய திரைப்படங்களைக் கண்டு களிக்கலாம்.

உள்ளூர் நிகழ்ச்சிகள்

உள்ளூர் தொடர் நாடகமான யாழி, நீங்காத நினைவுகள் கலைநிகழ்ச்சி, தீபாவளி அனல் பறக்குது, யார் உங்க கோலிவுட் கிங், ரசிக்க ருசிக்க சீசன் 5, திகில் சீசன் 5, பெட்டிக்குள்ள என்ன, கே.எல் டூ கே.கே, பேய் வேட்டை, நான் கபாலி அல்ல, ரயில் பயணங்கள் நாடகம் போன்ற நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ கோ-வில் அணுகலாம்.

நாடகங்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள்

#TamilSchoolmychoice

மலர், கில்லாடி ராணி, எங்கிட்ட மோதாதே, இயற்கையைத் தேடி, ராமர் வீடு, கலக்கப்போவது யாரு, போன்ற நிகழ்ச்சிகளின் அத்தியாயங்கள் அஸ்ட்ரோ கோ-வில் எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் எங்கே இருந்தாலும் கண்டு மகிழலாம்.

ஆப்பிள் கையடக்கக் கருவிகளில் இயங்கும் ஆப் ஸ்டோர் (App Store) அல்லது அண்ட்ரோய்டு கருவிகளில் இயங்கும் கூகுள் ப்ளே (Google Play) ஆகிய செயலிகளை நாடி அஸ்ட்ரோ கோ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள் அல்லது astrogo.my அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.