Home One Line P2 9 மாதங்களில் 149 பில்லியன் ரிங்கிட் முதலீடுகளை மலேசியா ஈர்த்தது

9 மாதங்களில் 149 பில்லியன் ரிங்கிட் முதலீடுகளை மலேசியா ஈர்த்தது

689
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – 2019-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் சேவைத் துறை, உற்பத்தித் துறை மற்றும் மூலத் தொழில்கள் ஆகிய துறைகளில் மலேசியா 149 பில்லியன் ரிங்கிட் முதலீடுகளை ஈர்த்துள்ளது.

இதனை அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்த அனைத்துலக வாணிப, தொழில் துறை அமைச்சர் டேரல் லெய்கிங் (படம்), முதலீடுகளைத் தேர்ந்தெடுப்பதில் மலேசியா கவனமுடன் செயல்படுவதாகவும், உள்நாட்டு பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சூழல்களை உருவாக்கக் கூடிய முதலீடுகளுக்கு மட்டுமே முதலிடம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

2018-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 142.6 பில்லியன் முதலீடுகளை மட்டுமே மலேசியா பெற்றது எனச் சுட்டிக் காட்டியிருக்கும் டேரல் லெய்கிங், இந்த ஆண்டுக்கான முதலீடுகள் கடந்த ஆண்டைவிட 4.4 விழுக்காடு அதிகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்த முதலீடுகள் 4,025 திட்டங்களில் செய்யப்பட்டிருக்கின்றன என்றும் கூடுதலாக 93,841 வேலைவாய்ப்புகளை இந்த முதலீடுகள் உருவாக்கும் என்றும் டேரல் லெய்கிங் மேலும் தெரிவித்திருக்கிறார்.

இந்த முதலீடுகளில் 82.7 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 55.5 விழுக்காடு உள்நாட்டிலிருந்து பெறப்பட்டதாகவும் எஞ்சிய 66.3 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 44.5 விழுக்காடு வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.