Home One Line P2 இலண்டனில் கத்திக் குத்து தாக்குதல் – இருவர் மரணம் – தாக்கியவன் சுடப்பட்டு மாண்டான்

இலண்டனில் கத்திக் குத்து தாக்குதல் – இருவர் மரணம் – தாக்கியவன் சுடப்பட்டு மாண்டான்

886
0
SHARE
Ad
படம்: நன்றி டுவிட்டர்

இலண்டன் – வெள்ளிக்கிழமை பிற்பகலில் புகழ் பெற்ற இலண்டன் பிரிட்ஜ் எனப்படும் பகுதியில் ஏற்கனவே குற்றச் செயல்களுக்காக சிறைவாசம் அனுபவித்து விடுதலையாகி இருந்த நபர் ஒருவன் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். காயமடைந்த மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உடனடியாக பதில் நடவடிக்கையில் இறங்கிய இலண்டன் காவல் துறையினர், தாக்குதல்காரனைச் சுட்டுக் கொன்றனர்.

தாக்குதல்காரன் அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கும் இலண்டன் காவல் துறை, அவன் பயங்கரவாதக் குற்றங்களுக்காக சிறைக்கு அனுப்பப்பட்டவன் என்றும் அனுமதியோடு, சிறையிலிருந்து வெளியே வந்தவன் என்றும் தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

(மேலும் விவரங்கள் தொடரும்)