Home One Line P1 சீனா, இந்தியா சுற்றுப் பயணிகளுக்கு 2020-இல் விசா தேவையில்லை

சீனா, இந்தியா சுற்றுப் பயணிகளுக்கு 2020-இல் விசா தேவையில்லை

967
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – எதிர்வரும் 2020 ஆண்டு ‘மலேசியாவுக்கு வருகை தாருங்கள்’ ஆண்டாக அறிவிக்கப்பட்டிருப்பதால், அடுத்த ஆண்டில் மலேசியாவுக்கு வருகை தரும் சீனா, இந்தியா நாட்டு மக்களுக்கு விசா தேவையில்லை.

15 நாட்கள் வரை அவர்கள் விசா இன்றி மலேசியாவில் தங்கலாம். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், மின்னியல் வழி தங்களின் பயணத்தையும், தங்களின் தகவல்களையும் பதிவு செய்து கொள்ளலாம். சொந்தமாகவோ அல்லது தங்களின் நாடுகளில் உள்ள சுற்றுலா நிறுவனங்களின் மூலமாகவோ அவர்கள் இந்தப் பதிவுகளை செய்து கொள்ளலாம்.

மலேசியாவுக்குள் நுழைவதும் வெளியேறுவதும் குறிப்பிடப்பட்ட விமான நிலையங்களின் வழியாகவோ அல்லது குடிநுழைவுத் துறை வாயில்களின் வழியாகவோ நிகழ வேண்டும்.

#TamilSchoolmychoice

நாட்டிற்குள் நுழையும்போது இந்த இரு நாடுகளின் சுற்றுலா பயணிகள் தங்களின் ஆவணங்களோடு, தங்களிடம் போதிய பணக் கையிருப்பு இருப்பதையும் அல்லது பணப் பற்று அட்டை (கிரெடிட் அல்லது டெபிட் கார்ட்) போன்றவை இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தங்களின் நாடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்கான விமான பயணச் சீட்டுகள் இருப்பதையும் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

2020-ஆம் ஆண்டில் 30 மில்லியன் சுற்றுப் பயணிகள் மலேசியாவுக்குள் வருவதை இலக்காகவும் அவர்கள் மூலமாக 100 பில்லியன் ரிங்கிட் சுற்றுலா மூலமான வருமானத்தையும் பெறவும் மலேசிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.