17 குழுக்களின் அறிக்கையைப் படிக்கும் போது, அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கைகளில் அவர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக டோங் சோங் தலைவர் தான் தை கிம் கூறினார்.
“கூட்டாட்சி அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி ஒன்று கூடுவது மற்றும் கருத்து சுதந்திரம் என்பது மக்களின் உரிமை என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்” என்று தான் கூறினார்.
“மாநாட்டை சீர்குலைப்பதாக அச்சுறுத்தும் தனிநபர்கள் மற்றும் குழுக்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
“இது காவல்துறையின் பொறுப்பாக இருக்க வேண்டும், சட்டத்திற்கு இணங்குவோரை அடக்குவதற்கான சட்ட நடைமுறைகளை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.”
“காவல்துறை சட்டத்தின் ஆட்சியைக் கைவிட்டு, தூண்டுதல் மற்றும் அச்சுறுத்துபவர்களை ஆதரிப்பது போல் உள்ளது” என்று அவர் கூறினார்.
முன்னதாக நேற்று வெள்ளிக்கிழமை ஜாவி பாடம் குறித்த எதிப்பு மாநாடு நடத்தப்படக்கூடாது என்று காவல் துறையினர் விண்ணப்பித்த தடைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.