அலாஸ்கா: ஒரு வருட தீவிர வெப்பமான வானிலைக்குப் பிறகு 2019-இன் பிற்பகுதியில், சராசரி வெப்பநிலையை அலாஸ்கா பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் மேற்கு கடற்கரையிலும், பெரிங் ஜலசந்தியிலும் உள்ள மண்டலங்கள் பேரழிவு தரும் காட்டுத் தீ சம்பவம் வரை கடுமையான கோடை காலநிலையை எதிர்கொண்டுள்ளன. முன்பு பனி மட்டுமே இருந்த இடத்தில், குளிர்காலத்தில் கடும் மழையும், கடலில் பனி கட்டிகள் கறைந்தும் போயின.
வனவிலங்குகளும் கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டன. கடல் பாலூட்டிகள் வசதியாக வாழவில்லை, கடல் பறவைகள் அதிக எண்ணிக்கையில் இறந்து கிடந்தன.
இந்த கொந்தளிப்புகள் அனைத்தும் தொடர்ச்சியான வெப்பநிலை முறைகளின் விளைவாகும். ஆர்க்டிக்கிற்கு அருகிலுள்ள அலாஸ்கா, மற்ற பகுதிகளை விட இரண்டு மடங்கு வெப்பநிலை அதிகரித்ததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
“சமீபத்திய குளிர் காலநிலை இருந்தபோதிலும், 2019 வெப்பமான ஆண்டாக உள்ளது என்பதை என்னால் மறுக்க முடியாது” என்று அலாஸ்கா பல்கலைக்கழக பருவநிலை ஆய்வாளர் பிரையன் பிரெட்ஸ்னீடர் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார்.