Home உலகம் நாட்டை விட்டு வெளியேற முஷாரப்புக்கு தடை

நாட்டை விட்டு வெளியேற முஷாரப்புக்கு தடை

477
0
SHARE
Ad

musarafஇஸ்லாமாபாத், ஏப்.9- பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், 1999ல், பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அரசை, ராணுவ புரட்சி மூலம் கவிழ்த்து, ஆட்சியை கைப்பற்றினார்.பின், 2002ல், பாக்., அதிபரான இவரது ஆட்சிக் காலத்தில், முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொல்லப்பட்டது, நீதிபதிகளை கைது செய்தது தொடர்பாக, முஷாரப் மீது, தேச துரோக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து, 2008ல், அதிபர் பதவியை ராஜினாமா செய்த முஷாரப், நாட்டை விட்டு வெளியேறி, துபாய் மற்றும் பிரிட்டனில் தஞ்சமடைந்தார்.வரும், மே 11ல், பொது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், “அனைத்து பாக்., முஸ்லிம் லீக் கட்சி’ சார்பாக  நான்கு தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்தார். ஆனால், சித்ரால் தொகுதியில் மட்டும் அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது.இதற்கிடையே  முஷாரப் மீதான தேச துரோக புகார் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடந்தது. இரண்டு நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தனர்.நீதிமன்றத்தில் முஷாரப் இன்று ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பிய நீதிபதிகள்  அவர் நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதித்துள்ளனர்.