கோலாலம்பூர்: கடந்த இரண்டு வாரங்களில் சீனாவிலிருந்து நாடு திரும்பிய மலேசியர்கள் அருகிலுள்ள மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தங்கள் உடல்நிலையை சரிபார்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் கேட்டுக் கொண்டார்.
அதே நேரத்தில் காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறிகளுடன் உள்ள சுற்றுலாப் பயணிகள் இதனை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று அவர் நினைவுபடுத்தினார்.
தற்போது, சீனாவின் வுஹானில் தொடங்கிய கொரோனாவைரஸ் தொற்றுநோயைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து சுகாதார வசதிகளும் சிகிச்சைக்கு தயாராகி வருவதாக அவர் கூறினார்.
“சீனாவிலிருந்து 14 நாட்களுக்கு முன்னர் மலேசியாவுக்கு திரும்பியவர்கள், காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற ஆரோக்கியமற்ற நோயின் அறிகுறிகளுடன் சுற்றுலாப் பயணிகள் தனியார் சுகாதார மையங்கள் அல்லது அரசாங்க மருந்துவமனைகளை உடனடியாக அணுக வேண்டும்”
“அனைத்து தனியார் சுகாதார வசதிகள் மற்றும் மருந்தகங்கள் கொரோனாவைரஸ் பரவும் அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளன” என்று அவர் இன்று புதன்கிழமை டுவிட்டரில் தெரிவித்தார்.