கோலாலம்பூர்: அதிகாரத்தை மாற்றுவது குறித்து பகிரங்கமாக பேச வேண்டாம் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் நம்பிக்கைக் கூட்டணியில் உள்ள அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.
அவரது ஆதரவாளர்களுக்கும், பிரதமர் மகாதீர் முகமட் ஆதரவாளர்களுக்கும் இடையே வாய்ச் சண்டை ஏற்பட்டு வரும் நிலையில், அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
“நம்பிக்கைக் கூட்டணியில் உள்ள அனைத்து தரப்பினரும் பிரதமர் பதவி மாற்றம் தொடர்பான பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டாம் என்றும், 2018-ஆம் ஆண்டு ஜனவரியில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்தை மதிக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.
இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில், நம்பிக்கைக் கூட்டணி மகாதீரை பிரதமராக நியமிக்க ஒப்புக் கொண்டது. பின்னர் பிரதமர் பதவி அன்வாரிடம் ஒப்படைக்கப்படும் என்று அது முடிவு செய்திருந்தது.
இன்று புதன்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில், பிரதமருக்கு தாம் ஆதரவு அளிப்பதாக, குறிப்பாக பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் மகாதீருக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.