Home கலை உலகம் கமலின் 2-வது மகள் அக்ஷராவும் நடிகையாகிறார்

கமலின் 2-வது மகள் அக்ஷராவும் நடிகையாகிறார்

579
0
SHARE
Ad
akshara

சென்னை, ஏப்ரல் 9- கமல் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் முன்னணி நடிகையாக உள்ளார்.

தற்போது கமலின் இரண்டாவது மகள் அக்ஷராவும் நடிக்க வருகிறார்.அக்ஷரா இந்திப் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். விளம்பர படத்திலும் நடித்துள்ளார்.

ஏற்கனவே கதாநாயகியாக நடிக்க பல படங்களுக்கு அவருக்கு வாய்ப்புகள் வந்தன. அவற்றை ஏற்கவில்லை. நடிப்பதற்கு விருப்பம் இல்லை என்றும் கேமராவுக்கு பின்னால் பணியாற்றுவதையே விரும்புகிறேன் என்றும் கூறி வந்தார்.

#TamilSchoolmychoice

‘கடல்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க மணிரத்னம் முதலில் அக்ஷராவைத்தான் அணுகினார். அவர் மறுத்ததால் ராதா மகள் துளசியை தேர்வு செய்தார்.

முன்னனி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தொடர்ந்து வற்புறுத்துவதால் அக்ஷரா நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு படத்தில் அறிமுகமாவார் என தெரிகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.