Home 13வது பொதுத் தேர்தல் மலாக்காவில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர் பெயர்களை அன்வார் அறிவித்தார்

மலாக்காவில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர் பெயர்களை அன்வார் அறிவித்தார்

445
0
SHARE
Ad

anwarமலாக்கா, ஏப்ரல் 9- எதிர்வரும் பொதுத் தேர்தலில், மலாக்கா மாநிலத்தில் பிகேஆர் சார்பாகப் போட்டியிடும் இரண்டு வேட்பாளர் பெயர்களை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம்  இன்று அறிவித்தார்.

அதன் படி, மலாக்கா மாநில பிகேஆர் தலைவர் சம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின், புக்கிட் கட்டில் நாடாளுமன்ற தொகுதியிலும், சபா முன்னாள் தலைமை ஆசிரியர் குழுவின் தலைவர் ரஹீம் அலி (வயது 67), தங்கா பத்து நாடாளுமன்ற தொகுதியிலும்  போட்டியிடுவார்கள் என்று  நேற்றிரவு புக்கிட் பாரு தாமான் புத்ராவில் நடைபெற்ற ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் அன்வார் அறிவித்தார்.

அன்வார் படித்த பல்கலைகழகத்தில் மூத்த மாணவரான ரஹீம் அலி, அன்வார் மீதிருந்த பற்று காரணமாக 1998 ஆம் ஆண்டு பிகேஆர் கட்சியில் இணைந்தார். மேலும் இவர் 1979 இல் இருந்து 1981 வரை சபா தலைமையாசிரியர் குழுவின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice