Home One Line P2 259 பேர் உயிரைக் காவு வாங்கிய கொரொனாவைரஸ், அதிகரிக்கும் மரண எண்ணிக்கை!

259 பேர் உயிரைக் காவு வாங்கிய கொரொனாவைரஸ், அதிகரிக்கும் மரண எண்ணிக்கை!

764
0
SHARE
Ad

பெய்ஜிங்: கொரொனாவைரஸ் காரணமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 259 பேரை எட்டியுள்ளது.

இது குறித்து இன்று சனிக்கிழமை தகவல் வெளியிட்ட சீன அரசாங்கம், சீனாவின் சுகாதார அதிகாரிகளின் புதிய புள்ளிவிவரங்களின்படி, கொரொனாவைரஸால் சீனாவில் குறைந்தது 259 பேர் இறந்துள்ளனர் என்றும், 11,791 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

சமீபத்திய இறப்புகளில் பெரும்பாலானவை ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவையாகும்.

#TamilSchoolmychoice

மேலும் 102,000 பேர் சுவாச நோயின் அறிகுறிகளுடன் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நோயிக்கான புதிய பதிவுகள்  வெளிநாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. இப்போது புதிதாக ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளன.