சென்னை: தமிழகத்தில் விவசாய நிலங்களை பெருநிறுவனங்கள் சொந்த இலாபத்திற்காக ஆக்கிரமிப்பு செய்து விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகளின் அன்றாட வாழ்கையை நாசப்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இந்நிலையில், தற்போது, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும் என்றும், விவசாயிகள் படும் துயரத்தை கவனத்தில் கொண்டு இதை தாம் அறிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுப்பதற்கு அனுமதிக்க முடியாது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு கொண்டு வராது.” என்று அவர் பேசியுள்ளார்.