கோலாலம்பூர்: நாட்டின் முக்கியக் கல்வியாளரும் எழுத்தாளருமான கே.எஸ். மணியம் நேற்று புதன்கிழமை மதியம் புற்று நோய்க்காரணமாக மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் இயற்கை எய்தினார்.
கே.எஸ். மணியம் என்பவரைப் பற்றிய அறிமுகம் தமிழ் சூழலில் பலருக்கு ஒரு கேள்விக்குறியாக இருக்கலாம். ஆங்கிலத்தில் அவரது எழுத்துகளும் படைப்புகளும் பரலவாக இருந்ததால் தமிழ் சூழலில் அவரை அறிந்திருப்போர் மிக அரிது.
இதனை, கருத்தில் கொண்டு, வல்லினம் இலக்கியக் குழு அன்னாரின் படைப்புகளை தமிழில் மொழிப்பெயர்த்தது பாராட்டுக்குரியதே. எழுத்தாளர் விஜயலட்சுமி, கே.எஸ்.மணியத்தின் படைப்புகளை தமிழ் சூழலில் அறிமுகப்படுத்தினார்.
அவரது படைப்புகள் பள்ளிகள் மற்றும் உள்ளூர் பல்கலைக்கழகங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
தென்கிழக்கு ஆசியாவில் எழுத்தாளர்களை அங்கீகரிக்கும் ராஜா ராவ் விருதை கே.எஸ்.மணியம் வென்றவராவார்.
மணியம் தனது முதல் படைப்பை 55 ஆண்டுகளுக்கு முன்பு தமது 22-வது வயதில் வெளியிட்டார்.