Home One Line P1 பதவி மாற்றம் தேதி நிர்ணயிக்கப்பட்டால் பெர்சாத்து கூட்டணியை விட்டு வெளியேறுவதாக எச்சரிக்கை!

பதவி மாற்றம் தேதி நிர்ணயிக்கப்பட்டால் பெர்சாத்து கூட்டணியை விட்டு வெளியேறுவதாக எச்சரிக்கை!

800
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் பதவி மாற்றம் குறித்து நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் கூட்டம் தம்மை முடிவெடுக்க அனுமதித்திருந்ததாக துன் டாக்டர் மகாதீர் கூறியிருந்தாலும், கூட்டம் பதட்டமாக நடைபெற்றதாக வட்டாரங்கள் தெரிவித்ததை மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் பிரதமர் பதவியினை ஒப்படைக்க ஒரு தேதியை நிர்ணயிக்குமாறு அமானா மற்றும் ஜசெக வற்புறுத்தியதாக வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

எவ்வாறாயினும், கூட்டத்தில் இது தொடர்பாக தலைவர்கள் டாக்டர் மகாதீருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பெர்சாத்து வெளியேறுவதை பரிசீலிக்கும் என்று அக்கட்சி எச்சரித்ததாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவையில் 138 இடங்களைக் கொண்டுள்ளது.

பெர்சாத்து வெளியேறினால் 26 இடங்களை இழந்து, அரசாங்கம் 112 இடங்களை மட்டுமே கொண்டிருக்கும். டாக்டர் மகாதீரை ஆதரிக்கும் சில பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதே முடிவினை எடுத்தால் அரசாங்கம் வீழ்ச்சியடையும்.

“அஸ்மினே துன் (டாக்டர் மகாதீர்) பதவியில் இருக்குமாறு தனது கருத்தை வெளியிட்டார் ” என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.

எவ்வாறாயினும், கூட்டத்தில் தலைவர்களுக்கு நெருக்கமான இரண்டு வட்டாரங்கள் கூறுகையில், அமானா தலைவர் முகமட் சாபு, தைரியமாக, பெர்சாத்து இல்லையெனில் அது குறித்து கவலைப்படவில்லை என்ற கருத்தினை வெளியிட்டதாகக் கூறினர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மூன்றாவது ஆதாரத்தின்படி, டாக்டர் மகாதீர் கூட்டம் முழுவதும் அமைதியாகவும் கவனமாக கருத்து பரிமாற்றங்களை கவனித்து வந்ததாகக் கூறினார்.

“அவர் அமைதியடைந்தார், அனைத்து வாதங்களையும் கேட்டார், ஒரு தீர்வை வழங்கினார்,” என்று அந்த வட்டாரம் கூறியது.

நவம்பர் மாதம் முடிவடையும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபெக்) உச்சமாநாட்டிற்குப் பிறகு அதிகாரத்தை மாற்றும் தேதியை தீர்மானிக்க டாக்டர் மகாதீரை அனுமதிக்குமாறு கேட்டு அன்வார் நிலைமையை எளிதாக்க முயன்றதாகக் கூறப்பட்டது.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில், டாக்டர் மகாதீருக்கு அருகில் அமர்ந்திருந்த அன்வார்,  தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

“துன் (டாக்டர் மகாதீர்) நாட்டை ஆளவும், பொருத்தமான நேரத்தை நிர்ணயிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும் என்று நான் நம்புகிறேன்.”

“இதற்கிடையில், நான் பொறுமையாக இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.