Home One Line P1 பொருளாதார ஊக்கத் திட்டம் தொடரும், மகாதீர் அறிவிப்பார்!- குவான் எங்

பொருளாதார ஊக்கத் திட்டம் தொடரும், மகாதீர் அறிவிப்பார்!- குவான் எங்

618
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பொருளாதார ஊக்கத் திட்டம் தொடரும் என்று இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

“மகாதீர் அறிவித்த தேதியில் பொருளாதார ஊக்கத் திட்டம் தொடரும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்” என்று லிம் ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஊக்கத் திட்டம் தொகுப்பு மற்றும் பிற விஷயங்களைப் பற்றி விவாதிக்க லிம் இன்று காலை மகாதீரை சந்தித்ததாகக் குறிப்பிட்டார்.