கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே நேற்று திங்களன்று நாடாளுமன்றத்தை கலைக்க சிறப்பு வர்த்தமானி ஒன்றை வெளியிட்டு, தேர்தலை ஏப்ரல் 25-ஆம் தேதி நடத்தப்போவதாக அறிவித்தார் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிபர் செயலகம் வெளியிட்டுள்ள சிறப்பு செய்திக்குறிப்பில், ராஜபக்சே திங்கட்கிழமை நள்ளிரவு தொடங்கி நாடாளுமன்றத்தை கலைத்து, புதிய நாடாளுமன்றத்தை மே 14-ஆம் தேதியன்று கூட்டுமாறு உத்தரவிட்டுள்ளார்.
பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 12 முதல் 19 வரை நடக்க இருக்கும் என்றும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களவையில் 225 உறுப்பினர்களின் வாக்கெடுப்புக்கு வழி வகுக்க, அரசியலமைப்பின் படி நான்கரை ஆண்டு அமர்வுக்கு பின்னர் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
கலைக்கப்பட்ட காலத்தில், இலங்கை அரசாங்கத்தின் தலைமையை இடைக்காலத்திற்கு மகிந்த ராஜபக்சே மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் அரசை வழி நடத்துவார்கள் என்று அரசியல் வல்லுநர்களை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதே நேரத்தில் அனைத்து அமைச்சர்கள் மற்றும் துணை மாநில அமைச்சர்கள் பதவியிலிருந்து விலக்கப்படுவார்கள்.
ஏப்ரல் மாதத்தில் நடக்க இருக்கும் வாக்கெடுப்பில் 16 மில்லியன் மக்கள் ஈடுபடுவார்கள என மதிப்பிடப்பட்டுள்ளது.