Home One Line P1 அட்லி சஹாரி மலாக்கா முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்

அட்லி சஹாரி மலாக்கா முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்

852
0
SHARE
Ad

மலாக்கா: அட்லி சஹாரி மலாக்கா முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

புக்கிட் கட்டில் சட்டமன்ற உறுப்பினருமான அவர் பெரும்பான்மை ஆதரவை இழந்த பின்னர் தனது பதவி விலகலை அறிவிக்கவில்லை. ஆனால், அவர் இனி முதல்வர் இல்லை என்று நேற்று மாலை தெரிவிக்கப்பட்டது.

“நான் நேற்று ஆளுநரைச் சந்தித்தேன். அந்த கூட்டத்தில் எனது சேவைகள் நேற்று மாலை 4 மணி வரை நிறுத்தப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மாநில சட்டசபை கலைக்கப்பட வேண்டும் என்று தான் முன்மொழிந்ததாக அட்லி கூறினார், ஆனால் அவரது கோரிக்கையை ஆளுநர் முகமட் காலில் யாகோப் நிராகரித்தார்.

பெர்சாத்து மற்றும் அதன் இரு சட்டமன்ற உறுப்பினர்களும் கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து மலாக்கா நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் கடந்த வாரம் வீழ்ந்தது.