மலாக்கா: புதிய மலாக்கா முதல்வர் இன்று புதன்கிழமை அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி இன்று மாநில ஆளுநர் துன் டாக்டர் முகமட் காலீல் யாகோபுடன் ஒரு சந்திப்பைக் கோருகிறார் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக டி ஸ்டார் தெரிவித்துள்ளது.
பெர்சாத்து தனது பாயா ரும்புட் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் ராபீக் நைசாமொகிதினை முதலமைச்சராக நியமிக்கத் திட்டமிட்டுள்ளதை அடுத்து இந்த சந்திப்பு நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
55 வயதான சுலைமான், நற்பெயரும் மாநிலத்தின் பல்வேறு இனங்களால் நன்கு விரும்பப்படுபவராக இருப்பதால் இந்த பதவிக்கு சிறந்த வேட்பாளர் அவர்தான் என்று அம்னோ கருதுகிறது.
அம்னோ, மலாக்கா மாநிலத்தில் 13 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. மாநிலத்தில் மொத்தம் 28 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். முதலமைச்சர் பதவிக்கு அதன் வேட்பாளரை பரிந்துரைக்க அனுமதிக்க வேண்டும் என்று வட்டாரங்கள் தெரிவித்ததாக ஸ்டார் குறிப்பிட்டுள்ளது.