Home One Line P2 இத்தாலியில் 16 மில்லியன் மக்கள் அடைக்கப்பட்டுள்ளனர்- சுகாதார ஊழியர்களுக்கான விடுப்பு இரத்து!

இத்தாலியில் 16 மில்லியன் மக்கள் அடைக்கப்பட்டுள்ளனர்- சுகாதார ஊழியர்களுக்கான விடுப்பு இரத்து!

549
0
SHARE
Ad

மிலான்: கொரொனாவைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இத்தாலி கடுமையான புதிய கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளது. மிலான் உட்பட அதன் வடக்கின் பெரும்பகுதி நகரங்கள் முழுவதும் அடைப்புக்கு அது உத்தரவிட்டது.

முன்னோடியில்லாத வகையில் இக்கட்டுப்பாடுகள், கூட்டங்களைக் கட்டுப்படுத்துவதையும், போக்குவரத்தைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகவும், சுமார் 16 மில்லியன் மக்களை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏப்ரல் 3 வரை இது நடைமுறையில் இருக்கும்.

ஒரே இரவில் பிரதமர் கியூசெப் கோன்டே இச்சட்டத்தில் கையெழுத்திட்டார்.

#TamilSchoolmychoice

புதிய நடவடிக்கைகள் இத்தாலியின் பணக்கார நகரமான லோம்பார்டியிலும், வெனிஸ், மொடெனா, பர்மா, பியாசென்சா, ரெஜியோ எமிலியா மற்றும் ரிமினி நகரங்கள் உட்பட நான்கு நகரங்களில் உள்ள 14 மாகாணங்களுக்கும் மக்கள் நுழையவோ அல்லது வெளியேறவோ கூடாது என்று கூறுப்படுகிறது.

நிரூபிக்கப்பட்ட வேலை தொடர்பான காரணங்கள் அல்லது சுகாதார பிரச்சனைகள் உள்ளவர்கள் மட்டுமே குறிப்பிட்ட அம்மண்டங்களிலிருந்து வெளியே செல்ல முடியும். சுகாதார ஊழியர்களுக்கான விடுப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.

“நாம் ஒரு தேசிய அவசரநிலையை எதிர்கொள்கிறோம். உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையின் பாதையை எடுக்க ஆரம்பத்தில் இருந்தே நாம் தேர்ந்தெடுத்தோம், இப்போது நாம் தெளிவுடனும் தைரியத்துடனும், உறுதியுடனும் நகர்கிறோம், ”என்று கோன்டே கூறினார்.

“வைரஸ் பரவுவதை நாம் கட்டுப்படுத்த வேண்டும், நம் மருத்துவமனைகள் அதிகமான மக்கள் இருப்பதைத் தடுக்க வேண்டும்,” என்று அவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அழைக்கப்பட்ட செய்தி மாநாட்டில் கூறினார்.

இத்தாலியில், கொரொனாவைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 25 விழுக்காடு உயர்ந்து 7,375 ஆகவும், இறப்புகள் 57 விழுக்காடு உயர்ந்து 366 இறப்புகளாகவும் பதிவாகி உள்ளன.