Home One Line P2 12 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பொருளாதார மந்தநிலையை உலகம் சந்திக்கும்!

12 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பொருளாதார மந்தநிலையை உலகம் சந்திக்கும்!

572
0
SHARE
Ad

வாஷிங்டன்: கொவிட் -19 பாதிப்பின் காரணமாக 2020-ஆம் ஆண்டில் உலகளாவிய பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தும் என்றும், அதன் விளைவுகள் 12 ஆண்டுகளுக்கு முன்பு உலகைத் தாக்கிய நிதி நெருக்கடிக்கு ஒத்ததாக இருக்கும் என்றும் அனைத்துலக நாணய நிதியம் (ஐஎம்எப்) கணித்துள்ளது.

2020-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பொருளாதார வளர்ச்சி கணிப்பு எதிர்மறையானது என்று அனைத்துலக நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“2020-ஆம் ஆண்டு மந்தநிலை பாதகமான விளைவுகள் மற்றும் நிதி நெருக்கடிக்கு ஒத்ததாக அல்லது மோசமாக இருக்கும், ஆனால் அது 2021- க்குள் மீட்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.