Home One Line P1 கொவிட்-19: நாட்டில் 106 புதிய சம்பவங்கள் பதிவு!

கொவிட்-19: நாட்டில் 106 புதிய சம்பவங்கள் பதிவு!

453
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் இன்று செவ்வாய்க்கிழமை 106 புதிய கொவிட் -19 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

மொத்தமாக 1,624 சம்பவங்கள் நாட்டில் பதிவாகி இருப்பதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், இந்த எண்ணிக்கையில் 43 சம்பவங்கள் ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடைபெற்ற நிகழ்ச்சி தொடர்புடையது என்று அவர் தெரிவித்தார்.

இன்று ஒருவர் இறந்துள்ள நிலையில், இதுவரையிலும், நாட்டில் மொத்தம் 15 பேர் கொவிட்-19 நோய்த்தொற்றுக் காரணமாக மரணமுற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், 64 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

இன்று 24 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 183-ஆக உயர்ந்தது.