கோலாலம்பூர்: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களைத் திரும்பக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் விஸ்மா புத்ரா பாகுபாடு காட்டவில்லை என்று துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ கமாருடின் ஜாபார் தெரிவித்தார்.
இன்னும் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களின் எண்ணிக்கை 61 நாடுகளில் 3,468-ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
விமான கட்டுப்பாடுகள் மற்றும் இடைநிறுத்தங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள மலேசியர்களை விரைவில் நாட்டிற்கு திரும்பும்படி விஸ்மா புத்ரா கேட்டுக்கொண்டது.
மேலும், இம்மாதிரியாக சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு மலேசியர்களைத் திரும்பக் கொண்டுவருவதற்கு விஸ்மா புத்ரா 19 மில்லியன் கூடுதல் ஒதுக்கீட்டைக் கோருவதாக அமைச்சர் தெரிவித்தார்.