Home உலகம் நோர்வே நாட்டில் உளவு பார்த்ததாக மலேசிய மாணவர் கைது

நோர்வே நாட்டில் உளவு பார்த்ததாக மலேசிய மாணவர் கைது

381
0
SHARE
Ad

ஓஸ்லோ : நோர்வே நாட்டில் வசித்து வரும் மலேசிய மாணவர் ஒருவர் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உளவு  பார்த்ததாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த செய்தியை வெளியிட்ட பெர்னாமா சம்பந்தப்பட்ட மாணவரின் பெயரை வெளியிடவில்லை.

மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சின் விஸ்மா புத்ரா வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

25 வயதான அந்த மாணவருக்கு தேவைப்பட்டால் வேண்டிய சட்ட உதவிகள் வழங்கப்படும் எனவும் விஸ்மா புத்ரா அறிவித்தது.

நோர்வேயின் பிரதமர் அலுவலகம், தற்காப்பு அமைச்சு, மற்ற அரசாங்க இலாகாக்களை அந்த மலேசிய மாணவர் உளவு பார்த்ததாகவும் நார்வே அரசாங்க அறிக்கை குறிப்பிட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை அந்த மாணவர் கைது செய்யப்பட்டார். உடனடியாக நீதிமன்றத்திலும் நிறுத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார்.