Home கலை உலகம் கீர்த்தி சுரேஷூக்கு திருமணமா?

கீர்த்தி சுரேஷூக்கு திருமணமா?

589
0
SHARE
Ad

சென்னை – அண்மைய ஆண்டுகளில் அறிமுகமான நடிகைகளில் நடிப்புத் திறனுக்கான பாராட்டுகளையும், அழகிலும், நளினத்திலும் இரசிகர்களின் ஈர்ப்பையும் ஒருசேரப் பெற்றவர் கீர்த்தி சுரேஷ்.

இவரது தாயார் மேனகா அந்நாளில் ரஜினிகாந்துடன் நடித்த நடிகைதான் என்றாலும் அவ்வளவாகப் புகழ் பெறவில்லை. சுரேஷ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

#TamilSchoolmychoice

கீர்த்தி சுரேஷ், நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் மகா நதி படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

கீர்த்தி சுரேஷின் பெற்றோர்கள் பாஜக கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் குடும்பத்தினர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டனர் என்றும் அந்த மாப்பிள்ளை பெரும் பணக்காரத் தொழிலதிபர் என்றும் ஊடகங்களில் தகவல்கள் கசிந்து வருகின்றன.

கீர்த்தி சுரேஷூம் இந்தத் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டார் என்றும் கூடியவிரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணத்திற்குப் பின்னரும் கீர்த்தி தொடர்ந்து நடிப்பாரா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

கீர்த்தி தற்போது ரஜினிகாந்தின் “அண்ணாத்தே” படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு படத்தில் என்ன வேடம் என்பது இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் ரஜினியின் தங்கை கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார் என்றும் ஆரூடங்கள் தெரிவிக்கப்படுகின்றன.