Home One Line P1 கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் 17 வரை கால அவகாசம்!

கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் 17 வரை கால அவகாசம்!

728
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொது பல்கலைக்கழகம், ஆசிரியர் பயிற்சி கல்லூரி, மெட்ரிகுலேஷன் கல்லூரி, பாலிடெக்னிக், மற்றும் திறன் பயிற்சி கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் 17 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 16-ஆம் தேதி விண்ணப்பத்திற்காக பேங்க் சிம்பானான் நேஷனல் (பிஎஸ்என்) மூலம் அடையாள எண்ணை வாங்குவதற்கான கடைசி நாளையும் கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் நோராய்னி அகமட் (படம்) ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்போது, மலேசிய கல்விச் சான்றிதழ் (எஸ்பிஎம்) மற்றும் மலேசிய உயர்நிலை கல்வி சான்றிதழ் (எஸ்டிபிஎம்) அல்லது இணைய அணுகலைப் பெறுவதில் சிரமங்களை மாணவர்கள் எதிர்கொள்வதை நான் புரிந்துகொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான எஸ்பிஎம் மாணவர்களுக்கான விண்ணப்ப முடிவு ஜூன் 3-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்டிபிஎம் மாணவர்களுக்கான விண்ணப்ப முடிவு ஆகஸ்ட் 18-ஆம் தேதியன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய தகவல் அல்லது விசாரணைகளுக்கு, https://www.facebook.com/UPUonlineBPKPJPT/- இல் உள்ள அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தைப் பார்வையிடவும் அல்லது ஏப்ரல் 14 வரை தினமும் காலை 10-11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் பேஸ்புக் நேரலையைக் காணவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.