Home One Line P1 கெடாவில் பலத்த மழை, காற்று- 86 வீடுகள் சேதம்!

கெடாவில் பலத்த மழை, காற்று- 86 வீடுகள் சேதம்!

571
0
SHARE
Ad

அலோர் ஸ்டார்: மாநிலத்தின் எட்டு மாவட்டங்களில் மொத்தம் 86 வீடுகள் மற்றும் ஐந்து கடை வளாகங்கள் பலத்த மழை மற்றும் தொடர் பலத்த காற்று வீசியதால் பெரும் சேதத்தை சந்தித்தன.

கோத்தா ஸ்டார், குபாங் பாசு, லங்காவி, யான், பெண்டாங், போகோக் செனா, சிக் மற்றும் பாலிங் ஆகிய மாவட்டங்களில் உள்ள வீடுகளும் கடைகளும் இதில் பாதிக்கப்பட்டதாக மாநில பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுக் குழுத் தலைவர் ஹாலிமதோன் சாடியா சாஹாட் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் அதிக வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சிக்கில், 10 வீடுகள் மற்றும் ஐந்து கடைகள் பாதிக்கப்பட்டன. ஒன்பது வீடுகள், யான் மற்றும் குபாங் பாசுவிலும், பெண்டாங் (4), லங்காவி (2) மற்றும் போகோக் செனா மற்றும் பாலிங்கில் ஒரு வீடும் பாதிக்கப்பட்டன “.

“காலை 11 மணி நிலவரப்படி, பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 86 மற்றும் ஐந்து கடை வளாகங்கள். காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ” என்று அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள சேவை மையங்கள் மூலமாகவும் தகுந்த உதவிகள் வழங்கப்படும் என்று ஹலிமதோன் சாடியா கூறினார்.