Home One Line P1 அஸ்ட்ரோ: ஊழியருக்கு கொவிட்-19 பாதிப்பு- ஒளிபரப்பு மையம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும்!

அஸ்ட்ரோ: ஊழியருக்கு கொவிட்-19 பாதிப்பு- ஒளிபரப்பு மையம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும்!

717
0
SHARE
Ad
படம்: நன்றி அஸ்ட்ரோ

கோலாலம்பூர்: அஸ்ட்ரோ தனது ஒளிபரப்பு மையத்தை ஏப்ரல் 7-ஆம் தேதி வரை இரண்டு நாட்களுக்கு மூடுவதாக அறிவித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், புக்கிட் ஜாலீலில் உள்ள இந்த ஒளிபரப்பு மையத்தில், ஒளிபரப்பு போக்குவரத்துக் குழுவுடன் பணிபுரியும் அதன் ஊழியர் ஒருவருக்கு ஏப்ரல் 5-ஆம் தேதி கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டதாக அது தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட அந்த ஊழியர் தற்போது அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

#TamilSchoolmychoice

“ஊழியருடன் தொடர்பில் உள்ளவர்களை அடையாளம் காண நாங்கள் பணியாற்றி வருகிறோம். முன்னெச்சரிக்கையாக, புக்கிட் ஜாலீல் ஒளிபரப்பு மையம் முழு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் ஏப்ரல் 8-ஆம் தேதி திறக்கப்படும்” என்று அஸ்ட்ரோ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

நேரடி நிகழ்ச்சிகளையும், பொது நிகழ்ச்சிகளையும் இரத்து செய்துள்ளதாக அஸ்ட்ரோ கூறியுள்ளது. மேலும் தனது அணி பல்வேறு இடங்களில் பிரிந்து வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள் என்றும் அது கூறியது.

“இதன் தொடர்ச்சியால் எங்கள் ஒளிபரப்பு பாதிக்கப்படவில்லை” என்று அஸ்ட்ரோ குறிப்பிட்டுள்ளது.