Home One Line P1 கெடாவில் இருவர் மின்னல் தாக்கி மரணம்!

கெடாவில் இருவர் மின்னல் தாக்கி மரணம்!

689
0
SHARE
Ad

அலோர் ஸ்டார்: நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் சீக், கம்போங் ஹுஜுங் பெச்சாவில் உள்ள ஒரு வீட்டின் முன் கொட்டகையில் மின்னல் தாக்கி இரண்டு பேர் மரணமடைந்தனர்.

சீக் மாவட்ட காவல்துறைத் தலைவர் அப்துல் ரசாக் உஸ்மான் நேற்று இரவு ஒரு சுருக்கமான அறிக்கையில் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் இட்ருஸ் அகமட், 35, மற்றும் முகமட் சுல்கெப்லி காசிம், 44, என அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்தார். இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்ததாக அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழையின் போது, சம்பவ இடத்தில் இருந்த இருவருமே மின்னல் தாக்கி இறந்தனர்.” என்று அவர் கூறினார்.

பலியான இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக சீக் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அப்துல் ரசாக் தெரிவித்தார்.