Home One Line P2 அமெரிக்க அதிபர் தேர்தல் : பெர்னி சாண்டர்ஸ் விலகினார்; இனி டிரம்ப் – ஜோ பிடன்...

அமெரிக்க அதிபர் தேர்தல் : பெர்னி சாண்டர்ஸ் விலகினார்; இனி டிரம்ப் – ஜோ பிடன் நேரடி மோதல்

483
0
SHARE
Ad

வாஷிங்டன் – கொவிட்-19 அமெரிக்காவையே தலைகீழாகப் புரட்டி வரும் வேளையில், இன்னொரு புறத்தில் அந்நாடு எதிர்வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்காகவும் தயாராகி வருகிறது.

டிரம்பை எதிர்த்து அதிபர் தேர்தலில் குதிக்கப் போகும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் யார் என்ற போட்டி, பெர்னி சாண்டர்ஸ் (படம்), முன்னாள் துணையதிபர் ஜோ பிடன் ஆகிய இருவருக்கும் இடையில் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் தற்போது பெர்னி அந்தப் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்-ஜோ பிடன் இடையில்தான் போட்டி நிகழும் என்பது உறுதியாகிவிட்டது.

பெர்னி சாண்டர்ஸ் – ஜோ பிடன்

கொவிட்-19 பாதிப்புகளால் மரண எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், இந்தப் பிரச்சனையை டிரம்ப் முறையாகக் கையாளவில்லை என்ற கண்டனங்களும் அமெரிக்காவில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.

எல்லோரையும் மிரட்டுவது போல் பேசுவது, பழியைத் தூக்கி மற்றவர்கள் மீது போடுவது, மரண எண்ணிக்கையை தீவிரமாகக் கருதாமல் ஏதோ சாதாரண சம்பவம்போல் விவரிப்பது, முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காதது, பத்திரிகையாளர் சந்திப்புகளின்போது ஊடகவிலயலாளர்களின் கேள்விகளுக்கு முறையாகப் பதிலளிக்காமல் அடிக்கடி அவர்களுடன் மோதுவது போன்ற காரணங்களால் டிரம்பின் செல்வாக்கு பெருமளவில் சரிந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

எனினும் இவை அனைத்தும் அவருக்கு எதிரான வாக்குகளாக மாறுமா? ஜோ பிடனுக்கு ஆதரவாகத் திசை திரும்புமா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவான வாக்குகள், தற்போது பிளவுபட்டு இருக்கின்றன, இது எனக்கே சாதகம் என டிரம்ப் பெர்னி சாண்டர்ஸ் விலகல் குறித்துக் கருத்துரைத்திருக்கிறார்.

எனினும், கொவிட்-19 பிரச்சனைகளால் டிரம்பை வீழ்த்துவதற்கு இதுவே தக்க தருணம் எனக் கருதும் ஜனநாயகக் கட்சியினரில் பெர்னி சாண்டர்சின் ஆதரவாளர்களாக இருப்பவர்கள், தொடர்ந்து ஜோ பிடனுக்கே தங்களின் ஆதரவைத் தருவார்கள் என்றும், ஜனநாயகக் கட்சியினர் ஒருமித்து டிரம்பை எதிர்ப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.