Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: இணக்க விகிதம் 97 விழுக்காடாகப் பதிவு!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: இணக்க விகிதம் 97 விழுக்காடாகப் பதிவு!

837
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் இணக்க விகிதம் இப்போது 97 விழுக்காடாகப் பதிவாகி உள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

நடமாட்டக் காட்டுப்பாடு ஆணையின் போது சுமார் 300 பேர் அவ்வுத்தரவுக்கு எதிராக செயல்பட்டதன் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். முந்தைய நாளோடு ஒப்பிடும்போது இது 34 விழுக்காடு குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.