கோலாலம்பூர்: ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் அமைந்துள்ள சிலாங்கூர் மென்ஷன் மற்றும் மலாயன் மென்ஷனில் இறுக்கமான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை 1,950 உணவுப் பொட்டலங்கள் வழங்குவதாக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்தார்.
“அவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை 1,950 பொட்டலங்கள் வரை உதவ உள்ளோம்” என்று அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
நேற்று இரவு உணவு விநியோகிக்கத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பாதிக்கப்பட்ட மலேசியாவில் உள்ள வெளிநாட்டு மக்களுக்கு தூதரகம் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நேற்று தெரிவித்தார்.
சுமார் 5,000 முதல் 6,000 பேர் குடியிருக்கும் சிலாங்கூர் மென்ஷன் மற்றும் மலாயன் மென்ஷனில் செவ்வாய்க்கிழமை முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விடுக்கப்பட்டது. அங்கிருக்கும் குடியிருப்பாளர்களில் 97 விழுக்காட்டினர் வெளிநாட்டினர் என்று இஸ்மாயில் கூறியிருந்தார்.