Home One Line P1 குவான் எங் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்- காயம் குறித்த விவரங்களை வெளியிடவில்லை!

குவான் எங் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்- காயம் குறித்த விவரங்களை வெளியிடவில்லை!

715
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் நேற்று புதன்கிழமை மருத்துவமனியிலிருந்து வெளியேறியதாக தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“காயம் காரணமாக எனது இடது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்ததற்காக நான் இரண்டு இரவுகளுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அனைத்து தரப்பினருக்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

“என்னைக் கவனித்த குடும்பத்துக்கும், குணமடைய உதவியவர்களுக்கும் நன்றி.”

“வீட்டிலேயே இருங்கள். நாம் ஒன்றாக வெல்ல முடியும், ”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு ஏற்பட்ட காயம் குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.

இதனிடையே, லிம் குவான் எங் விரைவில் குணமடைய வேண்டுவதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.