Home One Line P2 கனடா ‘உதயன்’ இதழ் விநியோகிப்பாளர் தம்பதி கொவிட்-19 தொற்றுக்குப் பலி

கனடா ‘உதயன்’ இதழ் விநியோகிப்பாளர் தம்பதி கொவிட்-19 தொற்றுக்குப் பலி

704
0
SHARE
Ad

டொரொண்டோ (கனடா) – ஈழ மண்ணில் இருந்து புலம் பெயர்ந்து கனடாவில் தமிழ் வளர்க்கும் மூத்த பத்திரிகையாளர்  லோகேந்திர லிங்கன் நடத்திவரும் பருவ இதழான ‘கனடா உதயன்’ வாரப் பத்திரிகையின் விநியோகிப்பாளர் தங்கம் என்னும் நாகராஜா தேசிங்கு ராஜாவும் (61 வயது) இந்தத் தொழிலில் எந்நாளும் அவருக்குத் துணை நின்ற அவரின் மனைவி திருமதி ஜோதி  என்ற புஷ்பராணி நாகராஜாவும் (56 வயது) கொடிய ஆட்கொல்லி கிருமியான கொரோனாவின் தொற்றுக்கு ஆளாகி மரணத்தைத் தழுவியது கனடா மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கனடா தமிழ்ப் பத்திரிகை உலகை இந்த சம்பவம் உலுக்கி விட்டது என்று கனடா உதயன் ஆசிரியர் லோகேந்திர லிங்கன் தெரிவித்தார்.

வாரந்தோறும் பத்திரிகை வெளியான உடனே சுடச்சுட வெள்ளிக்கிழமைதோறும் பிரம்டன், மிசிசாகா, நோர்த்யோர்க் உள்ளிட்ட பெருநகரப் பகுதிகளில் விநியோகம் செய்து வந்த இந்தத் தம்பதியர் கனடா உதயன் பத்திரிகை வளர்ச்சியில் முக்கியப் பங்கை ஆற்றி வந்தனர்.

#TamilSchoolmychoice

உலக அளவில் மக்களைப் பாதித்துள்ள கொரோனா நச்சுயிரியின் தாக்குதலில் இருந்த தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நாகராஜா தம்பதியர் உரிய மருத்துவ பாதுகாப்பு முறைகளை கையாண்டபடிதான் இருந்தனர். இருந்தாலும், அவர்களை இழக்க நேரிட்டது கனடவாழ் தமிழ்ச் சமூகத்திற்கும் தனிப்பட்ட முறையில் கனடா உதயன் பத்திரிகைக்கும் பெரிய இழப்பாகும் என்று லோகேந்திர லிங்கன் தெரிவித்தார்.