Home One Line P1 “அரசு ஊழியர்கள் வீட்டுக் கடனை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை!”- இஸ்மாயில் சப்ரி

“அரசு ஊழியர்கள் வீட்டுக் கடனை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை!”- இஸ்மாயில் சப்ரி

789
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது அரசு ஊழியர்கள் வழக்கம் போல் சம்பளத்தைப் பெறுவார்கள், எனவே அவர்கள் வீட்டுக் கடன்களை பொதுத்துறை வீட்டுவசதி ஆணையத்திடம் செலுத்த வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

அரசு ஊழியர்கள் “தகுதி 56” மற்றும் அதற்கும் கீழ்ப்பட்ட தகுதி கொண்டவர்கள் 500 ரிங்கிட் சலுகைகளையும் பெறுகின்றனர்.

“அரசாங்க வீட்டுக் கடன்களில், இது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் இன்னும் வழக்கமான சம்பளத்தைப் பெறுகிறார்கள், இது சிறு வணிகர்களின் சம்பளத்தை போல் இல்லை. அவர்கள் (சிறு வணிகர்கள்) ஒரு தொழிலைத் திறக்க முடியாது என்பதால், அவர்கள் ஒரு மானியம் பெற முடியும்,” என்று அவர் நேற்று திங்கட்கிழமை புத்ராஜெயாவில் கூறினார்.

#TamilSchoolmychoice

ஏப்ரல் 9-ஆம் தேதி, பொதுச் சேவை தொழிலாளர் சங்க காங்கிரஸ் (கியூபேக்ஸ்), பொதுத்துறை வீட்டுவசதி ஆணையம் மூலம் அரசு ஊழியர்களால் பெறப்பட்ட வீட்டுக் கடன்களுக்கு மூன்று மாத கால ஒத்திவைப்பை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது.