Home One Line P1 “ரம்லான் இம்முறை அர்த்தமுள்ள அனுபவமாக இருக்கும்”- முஸ்லிம் அல்லாத மத மன்றம்

“ரம்லான் இம்முறை அர்த்தமுள்ள அனுபவமாக இருக்கும்”- முஸ்லிம் அல்லாத மத மன்றம்

570
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய புத்த, கிறிஸ்தவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோயிச மன்றம், மலேசியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் ரம்லான் நோன்பு வாழ்த்தினைத் தெரிவித்துக் கொண்டது.

“கொவிட் -19 பாதிப்பைத் தொடர்ந்து நடமாட்டக் கட்டுப்பாடு நடப்பில் இருப்பதால் இந்த ஆண்டு ரம்லான் அனுபவம் நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும்” என்று அம்மன்றத்தின் தலைவர்கள் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தனர்.

ரம்லான் இந்த முறை புதிய இயல்பில் மகிழ்ச்சியான மற்றும் அர்த்தமுள்ள அனுபவமாக இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

#TamilSchoolmychoice

அவர்களைப் பொறுத்தவரை, இந்த ஏப்ரல் மாதத்தில், பிற மதத்தினரும் இந்து புத்தாண்டு, வைசாக்கி, கிங் மிங் திருவிழா மற்றும் ஈஸ்டர் போன்ற பண்டிகைகளை கொண்டாடினர்.

“கூடல் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று அரசாங்கம் கேட்டுக் கொள்வதால் முஸ்லிம் நண்பர்களும் இந்த மாதத்தில் தியாகங்களைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”

“மசூதி மற்றும் சூராவில் பிரார்த்தனை அனுமதிக்கப்படவில்லை என்றாலும், வீட்டில் பிரார்த்தனை செய்வது அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.”

“கடவுளின் கிருபையால் நாம் இந்த தொற்றுநோயை எதிர்கொண்டு வெல்வோம்” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.