Home One Line P1 பெற்றோர்கள் குழந்தைகளின் நோய்த்தடுப்பு அட்டவணையைப் பின்பற்ற வேண்டும்!- நூர் ஹிஷாம்

பெற்றோர்கள் குழந்தைகளின் நோய்த்தடுப்பு அட்டவணையைப் பின்பற்ற வேண்டும்!- நூர் ஹிஷாம்

458
0
SHARE
Ad
 படம்: நன்றி ஏபி

கோலாலம்பூர்: சுகாதார நிலையங்களில் நோய்த்தடுப்பு திட்டம் எப்போதும் போல செயல்பட்டு வருவதாகவும், சுகாதாரப் பணியாளர் நிர்ணயித்த, நோய்த்தடுப்பு அட்டவணை மற்றும் நியமனம் தேதியை பெற்றோர்கள் கடைப்பிடிக்க ஊக்குவிக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

கிராமத்திற்குத் திரும்பிய பெற்றோர்கள் நோய்த்தடுப்பு மருந்துகளை அருகிலுள்ள எந்தவொரு அரசு அல்லது தனியார் சுகாதார மருந்தகங்களிலும் பெற்றுக் கொள்ள அவர்களுடன் தொடர்புக் கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நிறைவேற்றப்பட்டிருப்பதால் நோய்த்தடுப்பு மருந்துகள் பெறுவதில் தாமதம் ஏற்படுவது குழந்தைகளுக்கும் தட்டம்மை மற்றும் போலியோ போன்ற நோய்கள் வரும் அபாயத்தை அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இது சளிக்காய்ச்சல் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் இது தடுக்கப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் கூறினார்.

“சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு ஏற்ப கொவிட்-19 சங்கிலியை உடைப்பதற்கான எங்கள் முயற்சியில், குழந்தைகளின் நோய்த்தடுப்பு சக்தியைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்” என்று அவர் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24 முதல் 30 வரை நடைபெறும் உலக நோய்த்தடுப்பு வாரத்தை முன்னிட்டு வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.