Home One Line P2 கொரொனாவுக்கு தடுப்பு மருந்து இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிப்பு

கொரொனாவுக்கு தடுப்பு மருந்து இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிப்பு

806
0
SHARE
Ad

ரோம் – உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் ஆராய்ச்சி மையங்களிலும், பரிசோதனைக் கூடங்களிலும் உலகையே பாதித்து வரும் கொவிட்19 நச்சுயிரிக்கு எதிரான தடுப்பு மருத்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது ரோம் நகரில் தொற்று நோய்க்கு எதிரான மருத்துவ பரிசோதனைகளை நடத்தி வரும் ஸ்பல்லான்சானி (Spallanzani) மருத்துவமனையில் கொவிட்19-க்கு  எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தி சைன்ஸ் டைம்ஸ் என்ற இணைய ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது. சைன்ஸ் டைம்ஸ், பிரபல அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்சின் கீழ் இயங்கும் அறிவியல் தொடர்பான ஊடகமாகும்.

#TamilSchoolmychoice

கொவிட்19 நச்சுயிரிக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளதாக இந்தத் தடுப்பு மருந்து திகழ்கிறது. முதல் கட்டமாக எலிகளில் பரிசோதித்துப் பார்த்து அதில் சாதகமான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. தற்போது மனித உயிரணுக்களில் இது பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

உண்மையிலேயே எத்தனை காலத்திற்குள் கொவிட்19 எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் என்பதில் பல்வேறு முரண்பாடான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. செப்டம்பரில் சந்தைக்கு வரும் என இந்திய நிறுவனம் ஒன்று அறிவித்திருக்கிறது.

எனினும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட இன்னும் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் கூட ஆகலாம் என சில தரப்பினர் தெரிவித்திருக்கின்றனர்.

அவசர கதியில் ஒரு தடுப்பூசி மருந்தை அறிமுகப்படுத்த மருந்து நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. காரணம், அவ்வாறு செய்வதால், நடப்பு கொவிட்19 மீதான தீர்வு காண்பதை விட மேலும் பெரிய சுகாதாரப் பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும் அவை அச்சம் கொண்டிருக்கின்றன.

எனினும் ரோம் மருத்துவமனையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் புதிய தடுப்பு மருந்து மனித உடல்களில் கொவிட்19 நச்சுயிரியின் வீரியத்தை இழக்கச் செய்யும் வலிமையைக் கொண்டிருக்கிறது.யை

இதுவரையில் நடத்தப்பட்ட பரிசோதனைகளிலேயே இந்த தடுப்பு மருந்துதான் மிக மேம்பாடடைந்த நிலையில் இருப்பதாகவும் பரிசோதனைகள் காட்டுகின்றன.

மனிதர்கள் மீதிலான விரிவான பரிசோதனைகள் கூடியவிரைவில் தொடங்கவிருக்கின்றன.