கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சியின் அரசியலமைப்பை மீறியதாக கட்சித் தலைவர் மொகிதின் யாசின் மீது முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் குற்றம் சாட்டினார்.
மே 11-ஆம் தேதி, டாக்டர் மகாதீர் மற்றும் அவரது மகன், துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதீர் இல்லாமல், உச்சமன்றக் கூட்டத்தை நடத்த ஒருமனதாக மொகிதின் முடிவெடுத்தார் என்று மகாதீர் தெரிவித்தார். பின்பு அகூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சந்திப்புக் கூட்டம் இருவரையும் கட்சியிலிருந்து நீக்குவதற்கு என்று கூறப்பட்டது.
இன்று ஒரு காணொளி பதிவில் பேசிய மகாதீர், அத்தகைய கூட்டத்தை கட்சித் தலைவரால் மட்டுமே அழைக்க முடியும் என்று கூறினார்.
“ஆனால் (அவர்கள்) என்னை கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை, என்னை பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. இது ஒரு பெரிய தவறு.”
“மொகிதின் அம்னோ நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதை நான் உணர்ந்தேன். கட்சியின் அரசியலமைப்பைப் பின்பற்றாத ஒன்றைச் செய்ய அவர் விரும்புகிறார், ” என்று அவர் கூறினார்.