Home இந்தியா பத்மநாபசுவாமி கோவில் ரகசிய அறையில் 700 கிலோ தங்கம்

பத்மநாபசுவாமி கோவில் ரகசிய அறையில் 700 கிலோ தங்கம்

414
0
SHARE
Ad

img1130411018_1_1திருவனந்தபுரம், ஏப்ரல் 11-  திருவனந்தபுரம், பத்மநாபசுவாமி கோவிலின் ரகசிய அறைகளில் 700 கிலோ தங்கம் உள்ளதாக மதிப்பிடப்பட்டு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரசித்தப்பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள ஆறு ரகசிய அறைகளில் பொக்கிஷங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த பொக்கிஷங்கள் உள்ள அறைகளை திறந்து அவற்றை மதிப்பீடு செய்யும் பணியும் நடந்து வருகிறது. ஏ, பி, சி, டி என்று எப் வரை அந்த ரகசிய அறைகளுக்கு பெயரிடப்பட்டுள்ளது.