யு.சி.பெர்க்லி ஸ்கூல் என்ற ஆராய்ச்சி மையம், இதுகுறித்த செய்முறையை நடத்தி காட்டியுள்ளது. இம்மையத்தின் பேராசிரியர் ஜான் சுவாங், ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா நகரில் நடைபெற்ற, பதினேழாவது தகவல் பாதுகாப்பு மற்றும் ரகசியக் குறியீடு எழுத்து குறித்த கருத்தரங்கில், இந்த ஆராய்ச்சியின் அறிக்கையை சமர்ப்பித்தார். அவருடைய குழுவினர், ஈஈஜி சென்சார்கள், புளூடூத் மற்றும் தலையணைக் கருவி உபயோகிப்பதன்மூலம் இதனை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை அங்கு செயல்படுத்திக் காட்டினார்கள்.
சமீபகாலமாக, ஆராய்ச்சிகளில் பாதுகாப்பு கருதி விஞ்ஞானிகள் இம்முறையை பயன்படுத்துகின்றனர். மற்ற உடற்புள்ளியியல் முறைகள் போலவே, இம்முறையும் சிக்கலான, விலை உயர்வான பயன்பாடுகளைக் கொண்டது. ஆனால் பாதுகாப்பான, துல்லியமான மற்றும் மீண்டும் கையாளக்கூடிய விதத்திலும் அமைந்திருப்பது இம்முறையின் சிறப்புகள் என்பது இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.