Home கலை உலகம் நடிகை அஞ்சலி சென்னையில் பதுங்கலா?: அடிக்கடி தொடர்பு கொண்ட டாக்டரிடம் விசாரணை

நடிகை அஞ்சலி சென்னையில் பதுங்கலா?: அடிக்கடி தொடர்பு கொண்ட டாக்டரிடம் விசாரணை

551
0
SHARE
Ad

Anjaliஐதராபாத், ஏப்ரல் 12- ஐதராபாத்தில் மாதாபூர் பகுதியில் உள்ள தஸ் பல்லா ஓட்டலில் இருந்து வெளியேறிய பின்னர் நடிகை அஞ்சலி 18 பேருடன் செல்போனில் பேசி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. காலை 9.15 மணிக்கு ஓட்டலை விட்ட வெளியேறியது முதல் 10.22 மணிக்குள் சாம்ஷாபாத் விமான நிலையத்தை அஞ்சலி சென்றடைந்தது வரை பற்றிய தகவல்களை ஆந்திர போலீசார் விலாவாரியாக திரட்டி வைத்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

அஞ்சலியின் அண்ணன் ரவிசங்கர் கொடுத்த கடத்தல் புகாரை தொடர்ந்து அவர் மாயமான விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதைத் தொடர்ந்து அஞ்சலியுடன் ஓட்டலில் தங்கியிருந்த அவரது சித்தப்பா சூரிபாபுவிடம் போலீசார் முதலில் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர், காலையில் எழுந்து அஞ்சலியை எழுப்பி விட்ட நான் குளிக்கச் செல்லுமாறு கூறினேன். அதற்கு அவர் நீங்கள் முதலில் குளித்து விட்டு வாருங்கள் என்று சொன்னாள். இதன்படி குளிக்கச் சென்ற நான் திரும்பி வந்து பார்த்தபோது அவளை காணவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து ஓட்டலில் பொறுத்தப்பட்டிருந்த கேமராவை போலீசார் போட்டுப்பார்த்தனர். அதில் முந்தைய நாள் இரவில் அஞ்சலி, சித்தப்பா சூரிபாபுவுடன் ஓட்டலுக்குள் செல்லும் காட்சிகளும் மறுநாள் காலையில் நீலக்கலர் டி.சர்ட் மற்றும் ஜீன்ஸ், பேண்ட் அணிந்தபடி அஞ்சலி ஓட்டலை விட்டு வெளியேறும் காட்சியும் பதிவாகி இருந்தது.

#TamilSchoolmychoice

இதைப்பார்த்த பின்னர் தான் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அவசரம் அவசரமாக அஞ்சலி வெளியில் செல்லும் காட்சி கேமராவில் பதிவாகி இருந்ததை பார்த்த பிறகு அவர் யாராலும் கடத்தப்படவில்லை என்பது மட்டும் உறுதியாகி இருப்பதாக அம்மாநில போலீஸ் அதிகாரி சுதிர்பாபு தெரிவித்துள்ளார். இதன் பிறகு அஞ்சலியின் செல்போன் நம்பரை வைத்து அவர் எங்கு சென்றார் என்பது பற்றி துப்பு துலக்கப்பட்டது.

ஓட்டலில் இருந்து வெளியேறிய பின்னர் காலை 10.30 மணி வர தனது செல்போனில் இருந்து 18 பேரிடம் அஞ்சலி பேசியுள்ளார். சென்னையைச் சேர்ந்த சுமின் சாலமன் என்ற டாக்டரிடம் அடிக்கடி அஞ்சலி பேசியுள்ளார். அண்ணா நகரில் வசித்து வரும் அவர் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சென்னையில் இருக்கும் அஞ்சலியின் சித்தி பாரதிதேவியிடமும் ஆந்திர போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். டாக்டரிடமும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

இதே போல தனது சினிமா நண்பர்கள் பலரிடமும் அஞ்சலி பேசியுள்ளார். இவர்கள் அனைவரிடமும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். விமான நிலையத்துக்கு அஞ்சலி சென்ற நேரத்தில் அங்கிருந்து பெங்களூர், சென்னைக்கு மட்டுமே விமானங்கள் சென்றுள்ளன. எனவே அஞ்சலி எங்கு சென்றிருப்பார் என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. இதன் முடிவில் அவர் ஆந்திராவில் இல்லை என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

எனவே அஞ்சலி சென்னையில்தான் பதுங்கி இருக்க வேண்டும் என்றும், அதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அஞ்சலி மாயமான விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அவர் எங்கு சென்றார்? யாருடைய பிடியில் இருக்கிறார்? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது போன்ற கேள்விகள் அடுக்கடுக்காக எழுகின்றன. அஞ்சலி வெளியில் வந்தால் மட்டுமே இக்கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.