Home கலை உலகம் ஆஸ்ட்ரோ வாராந்திர நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ வாராந்திர நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

912
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எதிர்வரும் வாரத்தில் ஆஸ்ட்ரோவின் பல்வேறு அலைவரிசைகளில் ஒளிபரப்பாகவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் வருமாறு :

வியாழன், 21 மே

பதி பட்னி அவுர் வோ (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

நடிகர்கள்: கார்த்திக் ஆர்யன், அனன்யா பாண்டே & பூமி பெட்னேகர்

ஒரு நடுத்தர வர்க்கத் திருமணமான ஆணான, சிந்து தியாகி, ஒரு இளம் ஆடை வடிவமைப்பாளரான தபஸ்யா மீது காதல் வயப்படுகிறார்.

வெள்ளி, 22 மே

கோட் பாதர் (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9.00 pm | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அனன்யா & அஸ்வந்த்

ஒரு ஆபத்தான குண்டரான மருது சிங்கத்திடம் சிக்கி தவிக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றிய ஒரு அதிரடி திரைப்படம். அவர்களின் உயிரைக் காப்பாற்ற, அதியமான், அவரது மனைவி மித்ரா மற்றும் மகன் அர்ஜுன் ஆகியோர் அவரை எதிர்த்து போராட நேரிடுகிறது.

தில் வில் பியார் வியார் (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்) *நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

கலர்ஸ் இந்தி (Colors Hindi HD) (அலைவரிசை 116), இரவு 10.00 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: மாதவன், ஜிம்மி ஷெர்கில் & சஞ்சய் சூரி

தேவ், விஷால் மற்றும் ரித்திக் ஆகியோர் பாடல் திறன் போட்டியில் பங்கெடுக்கின்றனர். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல தடைகள் ஏற்பட அதனால் நாளடைவில் அவர்களின் திறமைகள் வெளிக்கொணரப்படுகின்றன.

சனி, 23 மே

சிம்லா மிர்ச்சி (முதல் ஒளிபரப்பு – பிரிமியர்) *நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

Colors Hindi HD (அலைவரிசை 116), இரவு 10.00 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஹேமமாலினி, ராஜ்குமார் ராவ் & ராகுல் ப்ரீத் சிங்

சிம்லாவுக்கு குடும்ப பயணம் மேற்க்கொண்ட போது தனது தாயுடன் தங்கியிருக்கும் நைனாவின் பால் அவினாஷ் காதல் வயப்படுகிறான். இருப்பினும், நைனாவின் தாயிடம் அவர் ஒரு காதல் கடிதத்தைக் கொடுக்கவே நைனாவின் தாய் அது அவருக்கானது என்று தவறாக புரிந்துகொள்ள சிக்கல் ஏற்படுகிறது.

ஞாயிறு, 24 மே

அன்பின் உரையாடல் ஈகைத் திருநாள் (நேரலை) *நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 9.00 மணி  | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

அறிவிப்பாளர்: முகமது முசீன்

நோன்பு பெருநாளை முன்னிட்டு சிறப்பு நேரலை நிகழ்ச்சியை முகமது முசீன் வழிநடத்த அனைத்து மலேசியர்களும் 03-77812675 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்கள் வாழ்த்துக்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தெரிவிப்பதோடு அவர்கள் எவ்வாறு பண்டிகையை கொண்டாடினர் என்றும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த நேரத்தில் இரசிகர்கள் இஸ்லாமியப் பாடல்களையும் கேட்டு மகிழலாம்.

சினிபெஸ்ட் விருது விழா 2019 (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்) *நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), பிற்பகல் 1.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விமலா பெருமாள், சி.குமரேசன், பால கணபதி வில்லியம், ஜஸ்மீன் மைக்கல் மற்றும் பல திறமையான மலேசியத் திரைப்பட தயாரிப்பாளர்களை அங்கீகரிக்கும் இந்த பிரமாண்டமான விருது விழாவைக் காணத் தவறாதீர்கள்.

கயிறு (முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்) *நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 202), மாலை 6.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: எஸ்.ஆர். குணா

ஓர் இளைஞன் மக்களின் வீடுகளைப் பார்வையிடுவதன் மூலம் விதிகளையும் அதிர்ஷ்டங்களையும் முன்னறிவிப்பான். ஆனால், அவன் ஒர் உள்ளூர் பெண்ணின் மீது காதல் வயப்பட விஷயங்கள் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகின்றன.

என்ஜிகே  (அலைவரிசை முதல் ஒளிபரப்பு – பிரிமியர்) *நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 202), இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சூர்யா, ராகுல் ப்ரீத் சிங் & சாய் பல்லவி

நந்தா கோபாலன் குமரன் என்ற சமூக சேவகர் தனது கிராமத்திற்கு உதவ அரசியலில் சேர நிர்பந்தப்படுத்தப்படும் நிலையில் அதிகாரத்தில் நிலைத்திருக்க தந்திரங்களை கற்றுக் கொள்ளும்போது அவர் பல்வேறு தடைகளை எதிர்கொள்வதை இத்திரைப்படம் சித்தரிக்கின்றது.

மோட்டிச்சூர் சக்னச்சூர் (அலைவரிசை முதல் ஒளிபரப்பு – பிரிமியர்) *நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

Colors Hindi HD (அலைவரிசை 116), இரவு 10.00  | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: நவாசுதீன் சித்திகி & ஆத்தியா ஷெட்டி

36 வயதான வேலையற்ற, புஷ்பேந்தர் ஒரு மணமகளைக் கண்டுபிடிக்க முயன்றார். வெளிநாட்டில் குடியேறிய மணமகனை திருமணம் செய்வதே வாழ்க்கையில் ஒற்றை நோக்கமாகக் கொண்ட அனித்தா, அவரைத் திருமணம் செய்ய முடிவு செய்கிறார்.

JFW திரைப்பட விருதுகள் 2020 (அலைவரிசை முதல் ஒளிபரப்பு – பிரிமியர்) *நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), மாலை 5.00 மணி  | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான பெண்களை விருது வழங்கி கௌரவிப்பதோடு அவர்களின் சாதனைகளை பாராட்டுவதற்கான ஒரு விருது நிகழ்ச்சி.

காப்பான் (அலைவரிசை முதல் ஒளிபரப்பு – பிரிமியர்) *நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9.30 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சூர்யா, ஆர்யா, மோகன்லால் & சயீஷா

இந்தியப் பிரதமரைப் பாதுகாக்க ஒரு சிறப்பு முகவர் நியமிக்கப்பட, பயங்கரவாதிகள் குழு அமைத்த ஒரு குண்டு வெடிப்பில் துரதிஷ்டவசமாக அவர் கொல்லப்படுகிறார். பின்னர், இந்தக் கொலைக்கு பின்னால் இருப்பவர்களைக் கண்டறிய ஓர் அதிகாரி நியமிக்கப்படுகிறார்.

திங்கள், 25 மே

0013 (அலைவரிசை முதல் ஒளிபரப்பு (ப்ரிமியர்) *நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: நிவாஷன் கணேசன், புனிதா சண்முகம் & விக்ரன் இளங்கோவன்

சஷிதரன் சபாபதி இயக்கத்தில் மலர்ந்த உள்நாட்டு தொலைக்காட்சி திரைப்படமான (டெலிமூவி) இதில், ஒரு நண்பர்கள் குழு திட்டமிட்ட திகில் குறும்பு, ஒரு துயரமான சூழ்நிலையில் முடிவடைவதைச் சித்தரிக்கின்றது.

மிஸ் மலேசியன் இந்தியன் குளோபல் 2019 (அலைவரிசை முதல் ஒளிபரப்பு – பிரிமியர்) *நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), பிற்பகல் 1.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

மலேசிய இந்திய இளம் பெண்களை அடையாளக் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் ஓர் அழகுப் போட்டியாகும் இந்த நிகழ்ச்சி.

அடவி (அலைவரிசை முதல் ஒளிபரப்பு (பிரிமியர்) *நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 202), மாலை 6.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: வினோத் கிஷன் & அம்மு அபிராமி

ஒரு மலைவாழ் பழங்குடி வாசி ஒருவர் பேராசை கொண்ட கிராம உரிமையாளரிடமிருந்து தங்கள் நிலத்தைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்.

தேவி 2 (அலைவரிசை முதல் ஒளிபரப்பு (பிரிமியர்) *நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 202), இரவு 9.00 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: பிரபு தேவா & தமன்னா

ஒரு மனைவி இரண்டு ஆவிகளிடமிருந்து தன் அன்பான கணவனைக் காப்பாற்ற போராடும் வேளையில் பல தடைகள் ஏற்பட்ட போதிலும் அவர் முயற்சியை கைவிடவில்லை.

The Body (அலைவரிசை முதல் ஒளிபரப்பு – (பிரிமியர்) *நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

Colors Hindi HD (அலைவரிசை 116), இரவு 10.00 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: எம்ரான் ஹாஷ்மி, ரிஷி கபூர், சோபிதா துலிபாலா & வேதிகா

ஒரு காவல்துறை அதிகாரி ஒரு சவக்கிடங்கில் இருந்து காணாமல் போன ஆதிக்கம் நிறைந்த ஒரு பெண் தொழிலதிபரின் உடலைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அவரது கணவர் மீதான விசாரணையின் போது, இவ்வழக்கில் தெரிந்துக் கொள்ள பல விஷயங்கள் இருப்பதை அறிகிறார்.

Independent Live Fusion Festival பகுதி 1 (அலைவரிசை முதல் ஒளிபரப்பு –  பிரிமியர்) *நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), மாலை 5.00 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

ஹரிச்சரண், ஸ்வேதா மோகன், சக்திஸ்ரீ கோபாலன், ராஜேஷ் வைத்தியா மற்றும் பலர் பங்கேற்ற ஒரு வேடிக்கையான மற்றும் அற்புதமான இசை நிகழ்ச்சி.

அசுரன் (அலைவரிசை ப்ரிமியர்) *நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: தனுஷ் & மஞ்சு வாரியர்

ஒரு செல்வந்தனைக் கொன்றதன் விளைவுகளிலிருந்து தனது மகன் சிதம்பரத்தைக் காப்பாற்ற முயற்சி செய்கையில் சிவசாமி என்ற விவசாயி தனது குடும்பத்தினருடன் ஓடுகிறார்.

செவ்வாய், 26 மே

ஆடை (அலைவரிசை முதல் ஒளிபரப்பு – பிரிமியர்) *நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), பிற்பகல் 1.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அமலா பால்

ஒரு உற்சாகமான செய்தி தொகுப்பாளரான காமினி, தனது நண்பர்களிடையே குறும்பு விளையாட்டுகளை (pranks) விளையாடி இரசித்தார். முந்தைய நாள் இரவு ஒரு விருந்தில் கலந்து கொண்ட பிறகு அதிர்ச்சியூட்டும் நிலையில் ஒரு காலியான கட்டிடத்தில் எழுந்திருக்கிறார். முந்தைய இரவில் அவர்கள் கைது செய்யப்பட்டதை வெளிப்படுத்தும் விதமாக தன் தோழியிடமிருந்து ஒரு அழைப்பு அவளுக்கு வருகிறது.

Independent Live Fusion Festival பகுதி 2 (அலைவரிசை ஒளிபரப்பு (பிரிமியர்) *நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), மாலை 5.00 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

ஹரிச்சரண், ஸ்வேதா மோகன், சக்திஸ்ரீ கோபாலன், ராஜேஷ் வைத்தியா மற்றும் பலர் பங்கேற்ற ஒரு வேடிக்கையான மற்றும் அற்புதமான இசை நிகழ்ச்சி.

காஞ்சனா 3  *நோன்பு பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9.30 மணி | ஆஸ்ட்ரோ கோவில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: லாரன்ஸ், வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி & கோவை சரளா

பேய்களுக்குப் பயந்த ராகவா என்ற இளைஞன் தனது குடும்பத்துடன் ஒரு பங்களாவில் தங்கியிருக்கிறான். கொடூரமாக கொலை செய்யப்பட்டவர்களின் மரணத்திற்குப் பழிவாங்க வேண்டும் என்று விரும்பும் ஒரு ஆவியின் பிடியில் அவர் ஒரு நாள் சிக்கிக் கொள்கிறார்.