Home One Line P1 நாடாளுமன்றத்தில் மகாதீர் சுயேட்சை உறுப்பினராக அமர்ந்திருந்தார்

நாடாளுமன்றத்தில் மகாதீர் சுயேட்சை உறுப்பினராக அமர்ந்திருந்தார்

731
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

கோலாலம்பூர்: பெர்சாத்து தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மே 18 அன்று சட்டமன்றத்தில் கலந்து கொண்டு, சுயேட்சையாக மற்றும் எதிர்க்கட்சி அல்லாத நாடாளுமன்ற இருக்கையில் அமர்ந்திருந்தனர் என்று மார்சுகி யஹ்யா கூறினார்.

“இது சாதாரணமானது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் நம்பிக்கைக் கூட்டணியை ஆதரிக்கிறோம். ஆனால், நாங்கள் நம்பிக்கைக் கூட்டணியில் இல்லை” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கட்சித் தலைவர் மொகிதின் யாசினால் பணிநீக்கம் செய்யப்பட்ட போதிலும் பெர்சாத்துவின் பொதுச் செயலாளர் என்று கூறிக்கொண்ட மார்சுகி, எதிர்க்கட்சியினருடன் அமர்ந்திருந்தது டாக்டர் மகாதீரின் நிலைப்பாடு என்று கூறினார்.

#TamilSchoolmychoice

“தேசிய கூட்டணி உடன் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எங்களில் சிலர் ஆதரிக்கவில்லை. இது கட்சியின் முடிவு அல்ல.”

“(இருக்கை நிலை) சுயேட்சையானது. ஆனால் நம்பிக்கைக் கூட்டணியை ஆதரிக்கிறது.

“அவர் நம்பிக்கைக் கூட்டணியுடன் உட்காரவில்லை. அவர் ஒரு சுயேட்சை உறுப்பினராக இருக்கையில் அமர்ந்தார். ஆனால், நம்பிக்கைக் கூட்டணியை ஆதரிக்கிறார்,” என்று அவர் மலேசியாகினியிடம் தொடர்பு கொண்டபோது கூறியதாக அத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், பெர்சாத்து ஒருபோதும் நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேறவோ அல்லது தேசிய கூட்டணியில் சேரவோ முடிவெடுக்கவில்லை என்று மார்சுகி மீண்டும் வலியுறுத்தினார்.

முன்னதாக, மகாதீர் மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்குமாறு துணை இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் வான் அகமட பைய்சால் வான் அகமட் காமல் பெர்சாத்துவை வலியுறுத்தினார்.

கட்சி உறுப்பினர்கள் மற்ற அரசியல் கட்சிகளில் சேருவது குறித்து பெர்சாத்துவின் அரசியலமைப்பின் 10.2.3- வது பிரிவின்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வான் அகமட் கூறியிருந்தார்.