Home One Line P1 பினாங்கில் 2 பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கான ஆதரவை திரும்பப் பெற்றனர்

பினாங்கில் 2 பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கான ஆதரவை திரும்பப் பெற்றனர்

735
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: பினாங்கில் உள்ள இரண்டு பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர்.

பெர்தாம் சட்டமன்ற உறுப்பினர் காலிட் மெஹ்தாப் முகமட் இஷாக் மற்றும் தெலுக் பஹாங் சட்டமன்ற உறுப்பினர் சுல்கிப்ளி முகமட் லாசிம் ஆகியோர் மலேசியாகினியிடம் இந்த விவகாரத்தை இன்று காலை உறுதிப்படுத்தியதாக அது குறிப்பிட்டுள்ளது.

தனது நிலைப்பாட்டை மாற்றுவதற்கான காரணங்கள் குறித்து கேட்டதற்கு, கட்சி அறிவுறுத்தல்களை பின்பற்றி பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று காலிட் கூறினார்.

#TamilSchoolmychoice

“நான் இனிமேல் எதிர்க்கட்சி உறுப்பினராக கருதப்படுவேன்.

“எனது நிலைப்பாடு என்னவென்றால், நான் கட்சியுடன் இருக்கிறேன். நான் தலைவருடன் (மொகிதின்) இருக்கிறேன்” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடங்கியதிலிருந்து மாநில அரசு கூட்டங்களுக்கு தாம் அழைக்கப்படவில்லை என்று சுல்கிப்ளி மலேசியாகினியிடம் கூறினார்.

“எனது கட்சி உண்மையில் பினாங்கில் எதிர்க்கட்சியாக மாறியுள்ளது” என்று அவர் கூறினார்.

பிப்ரவரியில், ஷெரட்டன் நகர்வைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் போது, ​​இரு சட்டமன்ற உறுப்பினர்களும் முதலமைச்சர் சௌ கோன் இயோவை இரண்டு முறை சந்தித்து நம்பிக்கைக் கூட்டணிக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.