Home One Line P1 அஸ்மின் மற்றும் பிற உறுப்பினர்கள் பெர்சாத்துவில் இன்னும் இணையவில்லை

அஸ்மின் மற்றும் பிற உறுப்பினர்கள் பெர்சாத்துவில் இன்னும் இணையவில்லை

688
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி மற்றும் கட்சியை விட்டு வெளியேறிய மற்ற 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெர்சாத்து கட்சியில் சேர இன்னும் தங்கள் உறுப்பினர் பாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று மார்சுகி யஹ்யா கூறினார்.

டாக்டர் மகாதீர் முகமட் நியமித்த பெர்சாத்து கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் மார்சுகி, மொகிதின் யாசினால் பணிநீக்கம் செய்யப்பட்டார். அஸ்மின் குழு அதிகாரப்பூர்வமாக பெர்சாத்து கட்சியில் இணைந்ததை மொகிதின் உறுதிப்படுத்திய பின்னர் அவர் இதைக் கூறினார்.

“நான் அஸ்மினிடம் தனிப்பட்ட முறையில் எங்கே பாரம் (உறுப்பினர்) என்று கேட்டேன். இந்த நாள் வரை எந்த பதிலும் இல்லை. இதன் மூலமாக உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் இல்லை என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.

#TamilSchoolmychoice

“தலைவரிடமிருந்து ஓர் அறிவிப்பு மட்டுமே, அவர்கள் ஏற்கனவே உறுப்பினர்கள் என்று கூறுகிறது. எனவே, அவர்கள் ஏற்கனவே உறுப்பினர்களாக இருக்கிறார்களா என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம். உறுப்பினர் எண் இருக்க வேண்டும், அவர் எந்த கிளையில், தொகுதியில் இருக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும். இன்றுவரை அஸ்மின் மற்றும் அவரது நண்பர்களிடமிருந்து பெர்சாத்து கட்சியில் சேர எங்களுக்கு எந்த கோரிக்கையும் வரவில்லை” என்று அவர் நேற்று வெள்ளிக்கிழமை முகநூல் பக்கத்தில் இயங்கலை வழியான அமர்வில் தெரிவித்தார்.