Home One Line P2 பாகிஸ்தான் விமான விபத்தில் 97 பேர் பலி – இருவர் உயிர் பிழைத்தனர்

பாகிஸ்தான் விமான விபத்தில் 97 பேர் பலி – இருவர் உயிர் பிழைத்தனர்

757
0
SHARE
Ad

இஸ்லாமாபாத் : தெற்கு பாகிஸ்தான் நகரமான கராச்சியில் பாகிஸ்தான் அனைத்துலக விமான நிறுவனத்திற்குச் (பிஐஏ) சொந்தமான விமானம் வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானதில் 97 பேர் கொல்லப்பட்டதாக சிந்து சுகாதாரத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் இருவர் உயிர் பிழைத்துள்ளனர்.

லாகூரிலிருந்து விமானம் மொத்தம் 99 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்றதாக விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

விமானம் எந்த கட்டிடங்களையும் தாக்கவில்லை, தரையில் யாரும் கொல்லப்பட்டதாகத் தெரியவில்லை என்று பிஐஏ தலைமை நிர்வாக அதிகாரி ஏர் வைஸ் மார்ஷல் அர்ஷத் மாலிக் கராச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விமானம் ஒரு சந்துக்குள் தரையிறங்கியது.

உள்ளூர் மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கையை விமான நிறுவனம் கண்காணித்து வருவதாக மாலிக் கூறினார். இதற்கு குறைந்தது இரண்டு நாட்கள் ஆகும். தப்பிய ஒருவரைப் பற்றி மட்டுமே அவருக்கு தற்போது தெரியும் என்றும், அவர் பஞ்சாப் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாபர் மசூட் என்று கூறினார்.

இந்த விபத்தால் தாம் அதிர்ச்சியடைந்து வருத்தப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். “உடனடி விசாரணை” அமைக்கப்படும், என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரொனா தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இரண்டு மாத இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர் பாக்கிஸ்தானின் விமானப் போக்குவரத்து ஆணையம் வரையறுக்கப்பட்ட உள்நாட்டு விமானப் பயணத்தை சனிக்கிழமை மீண்டும் தொடங்க அனுமதித்தது.