Home One Line P1 முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு

முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு

601
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முதியோர் இல்லங்களில் கொவிட்19 நோய்த்தொற்று பரவுவதற்கான அதிக ஆபத்து உள்ளது என்று சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிசாம் அப்துல்லா தெரிவித்தார்.

இன்றுவரை பெறப்பட்ட 9,122 மாதிரிகளின் தரவுகளின்படி, 21 (0.2 விழுக்காடு) முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள் மற்றும் ஊழியர்கள் கொவிட்19- க்கு சாதகமாக முடிவைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

இதுவரையிலும் 267 முதியோர் இல்லங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் 18 (85.7 விழுக்காடு) பேர் அறிகுறியற்றவர்கள் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நேற்றைய நிலவரப்படி, நாட்டில் 78 புதிய சம்பவங்கள் பதிவாகி உள்ளன. மொத்தமாக நாட்டில் பதிவான கொவிட்19 சம்பவங்கள் 7,137-ஆக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஒருவர் மரணமுற்ற நிலையில், நாட்டின் மரண எண்ணிக்கை 115-ஆக உயர்ந்துள்ளது.