Home One Line P2 ஜோ லோ இல்லம் 7.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது

ஜோ லோ இல்லம் 7.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது

894
0
SHARE
Ad

நியூயார்க் – 1எம்டிபி விவகாரத்தில் தேடப்படும் வணிகர் ஜோ லோவுக்குச் சொந்தமான சொகுசு அடுக்கக இல்லம் 7.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டிருக்கிறது.

இந்த இல்லம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்திருக்கிறது. அங்குள்ள பிரின்ஸ் சாலையில் அமைந்துள்ள இந்த அடுக்ககம் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்டதாகும்.

பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க நிறுவனம் ஒன்று 7.6 மில்லியன் டாலர்களுக்கு இந்த இல்லத்தை வாங்கியிருக்கிறது. மலேசிய ரிங்கிட் மதிப்பில் இது 33 மில்லியன் ரிங்கிட்டாகும்.

#TamilSchoolmychoice

இந்த அடுக்ககத்தை ஜோ லோ 2014-இல் 13.8 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். அந்த விலையுடன் ஒப்பிடும்போது 6.2 மில்லியன் டாலர் விலைக் குறைப்போடு இந்த இல்லம் விற்கப்பட்டுள்ளது.

1எம்டிபி நிறுவனத்துக்குச் சொந்தமான பணத்தில் ஜோ லோ வாங்கிக் குவித்த சொத்துகள் தொடர்ந்து ஒவ்வொன்றாக விற்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் விற்கப்படும், ஜோ லோவுக்குச் சொந்தமான இரண்டாவது இல்லம் இதுவாகும்.

சில மாதங்களுக்கு முன்னர் ஜோ லோவுக்குச் சொந்தமான லாஸ் ஏஞ்சல்ஸ்  இல்லம் ஒன்று 18.5 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது.

அவருக்குச் சொந்தமான உல்லாசப் படகு இக்குனாமிட்டி மலேசிய அரசாங்கத்தால் விற்கப்பட்டது. கெந்திங் நிறுவனம் அந்தப் படகை வாங்கியது.