Home One Line P2 கொவிட்19: அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் பிரேசில் உள்ளது

கொவிட்19: அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் பிரேசில் உள்ளது

780
0
SHARE
Ad

பிரேசிலியா: கொரொனா சம்பவங்களுக்காக பிரேசில் உலகில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ளது. பிரேசிலில் 330,890 பேர் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரேசில் வெள்ளிக்கிழமை 1,001 இறப்புகளை பதிவு செய்துள்ளது. மொத்த இறப்புகள் 21,048- ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பாதிப்பைக் கையாண்டதற்காக பரவலாக விமர்சிக்கப்பட்டார். மேலும், ஆழமான அரசியல் நெருக்கடியின் மையத்தில் அவர் இருக்கிறார்.